காமத்துப்பால் - களவியல் - புணர்ச்சிமகிழ்தல்
Embrace-Bliss
குறள் 1101:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்கலைஞர் உரை:
ஒண்தொடி கண்ணே உள.
வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.மு.வ உரை:
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.சாலமன் பாப்பையா உரை:
விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.Translation:
All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,Explanation:
In this resplendent armlets-bearing damsel live! .
The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).குறள் 1102:
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைகலைஞர் உரை:
தன்நோய்க்குத் தானே மருந்து.
நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.மு.வ உரை:
நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.சாலமன் பாப்பையா உரை:
நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.Translation:
Disease and medicine antagonists we surely see;Explanation:
This maid, to pain she gives, herself is remedy.
The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.குறள் 1103:
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்கலைஞர் உரை:
தாமரைக் கண்ணான் உலகு.
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.மு.வ உரை:
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.Translation:
Than rest in her soft arms to whom the soul is giv'n,Explanation:
Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?.
Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?.குறள் 1104:
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்கலைஞர் உரை:
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.மு.வ உரை:
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.சாலமன் பாப்பையா உரை:
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.Translation:
Withdraw, it burns; approach, it soothes the pain;Explanation:
Whence did the maid this wondrous fire obtain?.
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?.குறள் 1105:
வேட் ட பொழுதின் அவையவைகலைஞர் உரை:
போலுமே தோட் டார் கதுப்பினாள்
தோள்.
விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.மு.வ உரை:
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.சாலமன் பாப்பையா உரை:
நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.Translation:
In her embrace, whose locks with flowery wreaths are bound,Explanation:
Each varied form of joy the soul can wish is found.
The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).குறள் 1106:
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குகலைஞர் உரை:
அமிழ்தின் இயன்றன தோள்.
இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.மு.வ உரை:
பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.சாலமன் பாப்பையா உரை:
இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.Translation:
Ambrosia are the simple maiden's arms; when I attainExplanation:
Their touch, my withered life puts forth its buds again!.
The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.குறள் 1107:
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்கலைஞர் உரை:
அம்மா அரிவை முயக்கு.
தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.மு.வ உரை:
அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.சாலமன் பாப்பையா உரை:
அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.Translation:
As when one eats from household store, with kindly graceExplanation:
Sharing his meal: such is this golden maid's embrace.
The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).குறள் 1108:
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைகலைஞர் உரை:
போழப் படாஅ முயக்கு.
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.மு.வ உரை:
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.சாலமன் பாப்பையா உரை:
இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.Translation:
Sweet is the strict embrace of those whom fond affection binds,Explanation:
Where no dissevering breath of discord entrance finds.
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.குறள் 1109:
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கலைஞர் உரை:
கூடியார் பெற்ற பயன்.
ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.மு.வ உரை:
ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.சாலமன் பாப்பையா உரை:
படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!.Translation:
The jealous variance, the healing of the strife, reunion gained:Explanation:
These are the fruits from wedded love obtained.
Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.குறள் 1110:
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்கலைஞர் உரை:
செறிதோறும் சேயிழை மாட்டு.
மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.மு.வ உரை:
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.சாலமன் பாப்பையா உரை:
நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.Translation:
The more men learn, the more their lack of learning they detect;Explanation:
'Tis so when I approach the maid with gleaming jewels decked.
As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).
காமத்துப்பால் - களவியல் - நலம்புனைந்துரைத்தல்
Beauty Extolled
குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்கலைஞர் உரை:
மென்னீரள் யாம்வீழ் பவள்.
அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.மு.வ உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.சாலமன் பாப்பையா உரை:
அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!.Translation:
O flower of the sensitive plant! than theeExplanation:
More tender's the maiden beloved by me.
May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.குறள் 1112:
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்கலைஞர் உரை:
பலர்காணும் பூவொக்கும் என்று.
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.மு.வ உரை:
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்).Translation:
You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,Explanation:
That many may see; it was surely some folly that over you stole!.
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.குறள் 1113:
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்கலைஞர் உரை:
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!.மு.வ உரை:
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.சாலமன் பாப்பையா உரை:
மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!.Translation:
As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;Explanation:
Darts are the eyes of her whose shoulders like the bambu bend.
The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.குறள் 1114:
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்கலைஞர் உரை:
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே! எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.மு.வ உரை:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.சாலமன் பாப்பையா உரை:
குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.Translation:
The lotus, seeing her, with head demiss, the ground would eye,Explanation:
And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie'.
If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one".குறள் 1115:
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்குகலைஞர் உரை:
நல்ல படாஅ பறை.
அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.மு.வ உரை:
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.சாலமன் பாப்பையா உரை:
என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.Translation:
The flowers of the sensitive plant as a girdle around her she placed;Explanation:
The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist.
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.குறள் 1116:
மதியும் மடந்தை முகனும் அறியாகலைஞர் உரை:
பதியின் கலங்கிய மீன்.
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.மு.வ உரை:
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.சாலமன் பாப்பையா உரை:
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.Translation:
The stars perplexed are rushing wildly from their spheres;Explanation:
For like another moon this maiden's face appears.
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.குறள் 1117:
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலகலைஞர் உரை:
மறுவுண்டோ மாதர் முகத்து.
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!.மு.வ உரை:
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.சாலமன் பாப்பையா உரை:
நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?.Translation:
In moon, that waxing waning shines, as sports appear,Explanation:
Are any spots discerned in face of maiden here?.
Could there be spots in the face of this maid like those in the bright full moon ?.குறள் 1118:
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்கலைஞர் உரை:
காதலை வாழி மதி.
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.மு.வ உரை:
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.சாலமன் பாப்பையா உரை:
நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.Translation:
Farewell, O moon! If that thine orb could shineExplanation:
Bright as her face, thou shouldst be love of mine.
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?.குறள் 1119:
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்கலைஞர் உரை:
பலர்காணத் தோன்றல் மதி.
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.மு.வ உரை:
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.சாலமன் பாப்பையா உரை:
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.Translation:
If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,Explanation:
Shine for my eyes alone, O moon, shine not for all to see!.
O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.குறள் 1120:
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்கலைஞர் உரை:
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை.மு.வ உரை:
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.சாலமன் பாப்பையா உரை:
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.Translation:
The flower of the sensitive plant, and the down on the swan's white breast,Explanation:
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed.
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.
காமத்துப்பால் - களவியல் - காதற்சிறப்புரைத்தல்
Love's Excellence
குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிகலைஞர் உரை:
வாலெயிறு ஊறிய நீர்.
இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.மு.வ உரை:
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.சாலமன் பாப்பையா உரை:
என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.Translation:
The dew on her white teeth, whose voice is soft and low,Explanation:
Is as when milk and honey mingled flow.
The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.குறள் 1122:
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்னகலைஞர் உரை:
மடந்தையொடு எம்மிடை நட்பு.
உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.மு.வ உரை:
இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.சாலமன் பாப்பையா உரை:
என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.Translation:
Between this maid and me the friendship kindExplanation:
Is as the bonds that soul and body bind.
The love between me and this damsel is like the union of body and soul.குறள் 1123:
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்கலைஞர் உரை:
திருநுதற்கு இல்லை இடம்.
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!.மு.வ உரை:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.சாலமன் பாப்பையா உரை:
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.Translation:
For her with beauteous brow, the maid I love, there place is none;Explanation:
To give her image room, O pupil of mine eye, begone! .
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.குறள் 1124:
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்கலைஞர் உரை:
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.மு.வ உரை:
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.சாலமன் பாப்பையா உரை:
என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.Translation:
Life is she to my very soul when she draws nigh;Explanation:
Dissevered from the maid with jewels rare, I die!.
My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.குறள் 1125:
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்கலைஞர் உரை:
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.மு.வ உரை:
போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.சாலமன் பாப்பையா உரை:
ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.Translation:
I might recall, if I could once forget; but from my heartExplanation:
Her charms fade not, whose eyes gleam like the warrior's dart.
If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).குறள் 1126:
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவராகலைஞர் உரை:
நுண்ணியர்எம் காத லவர்.
காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.மு.வ உரை:
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.சாலமன் பாப்பையா உரை:
என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.Translation:
My loved one's subtle form departs not from my eyes;Explanation:
I wink them not, lest I should pain him where he lies.
My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.குறள் 1127:
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்கலைஞர் உரை:
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.மு.வ உரை:
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.சாலமன் பாப்பையா உரை:
என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.Translation:
My love doth ever in my eyes reside;Explanation:
I stain them not, fearing his form to hide.
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.குறள் 1128:
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்கலைஞர் உரை:
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.மு.வ உரை:
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.சாலமன் பாப்பையா உரை:
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.Translation:
Within my heart my lover dwells; from food I turnExplanation:
That smacks of heat, lest he should feel it burn.
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.குறள் 1129:
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கேகலைஞர் உரை:
ஏதிலர் என்னும்இவ் வூர்.
கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்.மு.வ உரை:
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.சாலமன் பாப்பையா உரை:
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.Translation:
I fear his form to hide, nor close my eyes:Explanation:
'Her love estranged is gone!' the village cries.
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.குறள் 1130:
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்கலைஞர் உரை:
ஏதிலர் என்னும்இவ் வூர்.
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.மு.வ உரை:
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.சாலமன் பாப்பையா உரை:
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.Translation:
Rejoicing in my very soul he ever lies;Explanation:
'Her love estranged is gone far off!' the village cries.
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.
காமத்துப்பால் - களவியல் - நாணுத்துறவுரைத்தல்
Decorum Defied
குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்கலைஞர் உரை:
மடலல்லது இல்லை வலி.
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.மு.வ உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.சாலமன் பாப்பையா உரை:
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.Translation:
To those who 've proved love's joy, and now afflicted mourn,Explanation:
Except the helpful 'horse of palm', no other strength remains.
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.குறள் 1132:
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்கலைஞர் உரை:
நாணினை நீக்கி நிறுத்து.
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.மு.வ உரை:
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.சாலமன் பாப்பையா உரை:
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.Translation:
My body and my soul, that can no more endure,Explanation:
Will lay reserve aside, and mount the 'horse of palm'.
Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.குறள் 1133:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்கலைஞர் உரை:
காமுற்றார் ஏறும் மடல்.
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.மு.வ உரை:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.சாலமன் பாப்பையா உரை:
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.Translation:
I once retained reserve and seemly manliness;Explanation:
To-day I nought possess but lovers' 'horse of palm'.
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.குறள் 1134:
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுகலைஞர் உரை:
நல்லாண்மை என்னும் புணை.
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.மு.வ உரை:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.சாலமன் பாப்பையா உரை:
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.Translation:
Love's rushing tide will sweep away the raftExplanation:
Of seemly manliness and shame combined.
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.குறள் 1135:
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுகலைஞர் உரை:
மாலை உழக்கும் துயர்.
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.மு.வ உரை:
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.சாலமன் பாப்பையா உரை:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.Translation:
The maid that slender armlets wears, like flowers entwined,Explanation:
Has brought me 'horse of palm,' and pangs of eventide!.
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.குறள் 1136:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றகலைஞர் உரை:
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.மு.வ உரை:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.சாலமன் பாப்பையா உரை:
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.Translation:
Of climbing 'horse of palm' in midnight hour, I think;Explanation:
My eyes know no repose for that same simple maid.
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.குறள் 1137:
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்கலைஞர் உரை:
பெண்ணின் பெருந்தக்க தில்.
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.மு.வ உரை:
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.சாலமன் பாப்பையா உரை:
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.Translation:
There's nought of greater worth than woman's long-enduring soul,Explanation:
Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'.
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.குறள் 1138:
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்கலைஞர் உரை:
மறையிறந்து மன்று படும்.
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.மு.வ உரை:
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.சாலமன் பாப்பையா உரை:
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.Translation:
In virtue hard to move, yet very tender, too, are we;Explanation:
Love deems not so, would rend the veil, and court publicity!.
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).குறள் 1139:
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்கலைஞர் உரை:
மறுகின் மறுகும் மருண்டு.
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!.மு.வ உரை:
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.சாலமன் பாப்பையா உரை:
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.Translation:
'There's no one knows my heart,' so says my love,Explanation:
And thus, in public ways, perturbed will rove.
My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).குறள் 1140:
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்கலைஞர் உரை:
யாம்பட்ட தாம்படா ஆறு.
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.மு.வ உரை:
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!.Translation:
Before my eyes the foolish make a mock of me,Explanation:
Because they ne'er endured the pangs I now must drie.
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.
காமத்துப்பால் - களவியல் - அலரறிவுறுத்தல்
Public Clamour
குறள் 1141:
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்கலைஞர் உரை:
பலரறியார் பாக்கியத் தால்.
எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.மு.வ உரை:
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.சாலமன் பாப்பையா உரை:
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.Translation:
By this same rumour's rise, my precious life stands fast;Explanation:
Good fortune grant the many know this not!.
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.குறள் 1142:
மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுகலைஞர் உரை:
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.மு.வ உரை:
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.சாலமன் பாப்பையா உரை:
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.Translation:
The village hath to us this rumour giv'n, that makes her mine;Explanation:
Unweeting all the rareness of the maid with flower-like eyne.
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.குறள் 1143:
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்கலைஞர் உரை:
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!.மு.வ உரை:
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.சாலமன் பாப்பையா உரை:
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.Translation:
The rumour spread within the town, is it not gain to me?Explanation:
It is as though that were obtained that may not be.
Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).குறள் 1144:
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்கலைஞர் உரை:
தவ்வென்னும் தன்மை இழந்து.
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.மு.வ உரை:
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.சாலமன் பாப்பையா உரை:
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.Translation:
The rumour rising makes my love to rise;Explanation:
My love would lose its power and languish otherwise.
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.குறள் 1145:
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்கலைஞர் உரை:
வெளிப்படுந் தோறும் இனிது.
காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.மு.வ உரை:
காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.சாலமன் பாப்பையா உரை:
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.Translation:
The more man drinks, the more he ever drunk would be;Explanation:
The more my love's revealed, the sweeter 'tis to me! .
As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.குறள் 1146:
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்கலைஞர் உரை:
திங்களைப் பாம்புகொண் டற்று.
காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம்(( எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.மு.வ உரை:
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.சாலமன் பாப்பையா உரை:
நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.Translation:
I saw him but one single day: rumour spreads soonExplanation:
As darkness, when the dragon seizes on the moon.
It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.குறள் 1147:
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்கலைஞர் உரை:
நீராக நீளும்இந் நோய்.
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.மு.வ உரை:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.Translation:
My anguish grows apace: the town's reportExplanation:
Manures it; my mother's word doth water it.
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.குறள் 1148:
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்கலைஞர் உரை:
காமம் நுதுப்பேம் எனல்.
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.மு.வ உரை:
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.Translation:
With butter-oil extinguish fire! 'Twill proveExplanation:
Harder by scandal to extinguish love.
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.குறள் 1149:
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்கலைஞர் உரை:
பலர்நாண நீத்தக் கடை.
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.மு.வ உரை:
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.சாலமன் பாப்பையா உரை:
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.Translation:
When he who said 'Fear not!' hath left me blamed,Explanation:
While many shrink, can I from rumour hide ashamed?.
When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.குறள் 1150:
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கலைஞர் உரை:
கெளவை எடுக்கும்இவ் வூர்.
யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.மு.வ உரை:
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.சாலமன் பாப்பையா உரை:
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.Translation:
If we desire, who loves will grant what we require;Explanation:
This town sends forth the rumour we desire!.
The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).
No comments:
Post a Comment