அறத்துப்பால் - துறவறவியல் - வெகுளாமை
Restraining Anger
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்கலைஞர் உரை:
காக்கின்என் காவாக்கா.
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.மு.வ உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.சாலமன் பாப்பையா உரை:
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.Translation:
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Explanation:
Where power is none, what matter if thou check or give it rein?.
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?.குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்கலைஞர் உரை:
இல்அதனின் தீய பிற.
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.மு.வ உரை:
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.சாலமன் பாப்பையா உரை:
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.Translation:
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;Explanation:
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயகலைஞர் உரை:
பிறத்தல் அதனான் வரும்.
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.மு.வ உரை:
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.சாலமன் பாப்பையா உரை:
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.Translation:
If any rouse thy wrath, the trespass straight forget;Explanation:
For wrath an endless train of evils will beget.
Forget anger towards every one, as fountains of evil spring from it.குறள் 304:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்கலைஞர் உரை:
பகையும் உளவோ பிற.
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.மு.வ உரை:
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.சாலமன் பாப்பையா உரை:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.Translation:
Wrath robs the face of smiles, the heart of joy,Explanation:
What other foe to man works such annoy?.
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்கலைஞர் உரை:
தன்னையே கொல்லுஞ் சினம்.
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.மு.வ உரை:
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.Translation:
If thou would'st guard thyself, guard against wrath alway;Explanation:
'Gainst wrath who guards not, him his wrath shall slay.
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.குறள் 306:
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்கலைஞர் உரை:
ஏமப் புணையைச் சுடும்.
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.மு.வ உரை:
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.சாலமன் பாப்பையா உரை:
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.Translation:
Wrath, the fire that slayeth whose draweth near,Explanation:
Will burn the helpful 'raft' of kindred dear.
The fire of anger will burn up even the pleasant raft of friendship.குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுகலைஞர் உரை:
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.மு.வ உரை:
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.சாலமன் பாப்பையா உரை:
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.Translation:
The hand that smites the earth unfailing feels the sting;Explanation:
So perish they who nurse their wrath as noble thing.
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.குறள் 308:
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்கலைஞர் உரை:
புணரின் வெகுளாமை நன்று.
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.மு.வ உரை:
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.சாலமன் பாப்பையா உரை:
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.Translation:
Though men should work thee woe, like touch of tongues of fire.Explanation:
'Tis well if thou canst save thy soul from burning ire.
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்கலைஞர் உரை:
உள்ளான் வெகுளி எனின்.
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.மு.வ உரை:
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.Translation:
If man his soul preserve from wrathful fires,Explanation:
He gains with that whate'er his soul desires.
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.குறள் 310:
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்கலைஞர் உரை:
துறந்தார் துறந்தார் துணை.
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.மு.வ உரை:
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.சாலமன் பாப்பையா உரை:
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.Translation:
Men of surpassing wrath are like the men who've passed away;Explanation:
Who wrath renounce, equals of all-renouncing sages they.
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).
அறத்துப்பால் - துறவறவியல் - இன்னாசெய்யாமை
Non Violence
குறள் 311:
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாகலைஞர் உரை:
செய்யாமை மாசற்றார் கோள்.
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.மு.வ உரை:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.சாலமன் பாப்பையா உரை:
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.Translation:
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,Explanation:
No ill to do is fixed decree of men in spirit pure.
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.குறள் 312:
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாகலைஞர் உரை:
செய்யாமை மாசற்றார் கோள்.
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.மு.வ உரை:
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.சாலமன் பாப்பையா உரை:
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.Translation:
Though malice work its worst, planning no ill return, to endure,Explanation:
And work no ill, is fixed decree of men in spirit pure.
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.குறள் 313:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்கலைஞர் உரை:
உய்யா விழுமந் தரும்.
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.மு.வ உரை:
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.சாலமன் பாப்பையா உரை:
நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.Translation:
Though unprovoked thy soul malicious foes should sting,Explanation:
Retaliation wrought inevitable woes will bring.
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணகலைஞர் உரை:
நன்னயஞ் செய்து விடல்.
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.மு.வ உரை:
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.சாலமன் பாப்பையா உரை:
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.Translation:
To punish wrong, with kindly benefits the doers ply;Explanation:
Thus shame their souls; but pass the ill unheeded by.
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்கலைஞர் உரை:
தந்நோய்போல் போற்றாக் கடை.
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.மு.வ உரை:
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.சாலமன் பாப்பையா உரை:
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.Translation:
From wisdom's vaunted lore what doth the learner gain,Explanation:
If as his own he guard not others' souls from pain?.
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?.குறள் 316:
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைகலைஞர் உரை:
வேண்டும் பிறன்கண் செயல்.
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.மு.வ உரை:
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.சாலமன் பாப்பையா உரை:
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.Translation:
What his own soul has felt as bitter pain,Explanation:
From making others feel should man abstain.
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்கலைஞர் உரை:
மாணாசெய் யாமை தலை.
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.மு.வ உரை:
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.Translation:
To work no wilful woe, in any wise, through all the days,Explanation:
To any living soul, is virtue's highest praise.
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.குறள் 318:
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோகலைஞர் உரை:
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.மு.வ உரை:
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.Translation:
Whose soul has felt the bitter smart of wrong, how canExplanation:
He wrongs inflict on ever-living soul of man?.
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?.குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாகலைஞர் உரை:
பிற்பகல் தாமே வரும்.
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.மு.வ உரை:
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.Translation:
If, ere the noontide, you to others evil do,Explanation:
Before the eventide will evil visit you.
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.குறள் 320:
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்கலைஞர் உரை:
நோயின்மை வேண்டு பவர்.
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.மு.வ உரை:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.சாலமன் பாப்பையா உரை:
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.Translation:
O'er every evil-doer evil broodeth still;Explanation:
He evil shuns who freedom seeks from ill.
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.
அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை
Non-killing
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்கலைஞர் உரை:
பிறவினை எல்லாந் தரும்.
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.மு.வ உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.சாலமன் பாப்பையா உரை:
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.Translation:
What is the work of virtue? 'Not to kill';Explanation:
For 'killing' leads to every work of ill.
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.குறள் 322:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்கலைஞர் உரை:
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.மு.வ உரை:
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.சாலமன் பாப்பையா உரை:
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.Translation:
Let those that need partake your meal; guard every-thing that lives;Explanation:
This the chief and sum of lore that hoarded wisdom gives.
The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்கலைஞர் உரை:
பின்சாரப் பொய்யாமை நன்று.
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.மு.வ உரை:
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.சாலமன் பாப்பையா உரை:
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.Translation:
Alone, first of goods things, is 'not to slay';Explanation:
The second is, no untrue word to say.
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.குறள் 324:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கலைஞர் உரை:
கொல்லாமை சூழும் நெறி.
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.மு.வ உரை:
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.சாலமன் பாப்பையா உரை:
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.Translation:
You ask, What is the good and perfect way?Explanation:
'Tis path of him who studies nought to slay.
Good path is that which considers how it may avoid killing any creature.குறள் 325:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கலைஞர் உரை:
கொல்லாமை சூழ்வான் தலை.
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.மு.வ உரை:
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.சாலமன் பாப்பையா உரை:
வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.Translation:
Of those who 'being' dread, and all renounce, the chief are they,Explanation:
Who dreading crime of slaughter, study nought to slay.
Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்கலைஞர் உரை:
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.மு.வ உரை:
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.சாலமன் பாப்பையா உரை:
கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.Translation:
Ev'n death that life devours, their happy days shall spare,Explanation:
Who law, 'Thou shall not kill', uphold with reverent care.
Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.குறள் 327:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுகலைஞர் உரை:
இன்னுயிர் நீக்கும் வினை.
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.மு.வ உரை:
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.சாலமன் பாப்பையா உரை:
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.Translation:
Though thine own life for that spared life the price must pay,Explanation:
Take not from aught that lives gift of sweet life away.
Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்கலைஞர் உரை:
கொன்றாகும் ஆக்கங் கடை.
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.மு.வ உரை:
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.சாலமன் பாப்பையா உரை:
வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.Translation:
Though great the gain of good should seem, the wiseExplanation:
Will any gain by staughter won despise.
The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்கலைஞர் உரை:
புன்மை தெரிவா ரகத்து.
பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.மு.வ உரை:
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.சாலமன் பாப்பையா உரை:
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.Translation:
Whose trade is 'killing', always vile they show,Explanation:
To minds of them who what is vileness know.
Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.குறள் 330:
உயிர் உடம்பின் நீக்கியார் என்பகலைஞர் உரை:
செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை
யவர்.
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.மு.வ உரை:
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.சாலமன் பாப்பையா உரை:
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.Translation:
Who lead a loathed life in bodies sorely pained,Explanation:
Are men, the wise declare, by guilt of slaughter stained.
(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).
அறத்துப்பால் - துறவறவியல் - நிலையாமை
Instability
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்கலைஞர் உரை:
புல்லறி வாண்மை கடை.
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.மு.வ உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.சாலமன் பாப்பையா உரை:
நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.Translation:
Lowest and meanest lore, that bids men trust secure,Explanation:
In things that pass away, as things that shall endure!.
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).குறள் 332:
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்கலைஞர் உரை:
போக்கும் அதுவிளிந் தற்று.
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.மு.வ உரை:
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.சாலமன் பாப்பையா உரை:
நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.Translation:
As crowds round dancers fill the hall, is wealth's increase;Explanation:
Its loss, as throngs dispersing, when the dances cease.
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.குறள் 333:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்கலைஞர் உரை:
அற்குப ஆங்கே செயல்.
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.மு.வ உரை:
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.சாலமன் பாப்பையா உரை:
நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.Translation:
Unenduring is all wealth; if you wealth enjoy,Explanation:
Enduring works in working wealth straightway employ.
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.குறள் 334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்கலைஞர் உரை:
வாளது உணர்வார்ப் பெறின்.
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.மு.வ உரை:
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.சாலமன் பாப்பையா உரை:
நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.Translation:
As 'day' it vaunts itself; well understood, 'tis knife',Explanation:
That daily cuts away a portion from thy life.
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.குறள் 335:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைகலைஞர் உரை:
மேற்சென்று செய்யப் படும்.
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.மு.வ உரை:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.சாலமன் பாப்பையா உரை:
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.Translation:
Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,Explanation:
Arouse thyself, and do good deeds beyond the power of death.
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.குறள் 336:
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்கலைஞர் உரை:
பெருமை உடைத்துஇவ் வுலகு.
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.மு.வ உரை:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.சாலமன் பாப்பையா உரை:
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.Translation:
Existing yesterday, today to nothing hurled!-Explanation:
Such greatness owns this transitory world.
This world possesses the greatness that one who yesterday was is not today.குறள் 337:
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகலைஞர் உரை:
கோடியும் அல்ல பல.
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.மு.வ உரை:
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.சாலமன் பாப்பையா உரை:
உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.Translation:
Who know not if their happy lives shall last the day,Explanation:
In fancies infinite beguile the hours away!.
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.குறள் 338:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேகலைஞர் உரை:
உடம்பொடு உயிரிடை நட்பு.
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.மு.வ உரை:
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.Translation:
Birds fly away, and leave the nest deserted bare;Explanation:
Such is the short-lived friendship soul and body share.
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.குறள் 339:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிகலைஞர் உரை:
விழிப்பது போலும் பிறப்பு.
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.மு.வ உரை:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.சாலமன் பாப்பையா உரை:
உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.Translation:
Death is sinking into slumbers deep;Explanation:
Birth again is waking out of sleep.
Death is like sleep; birth is like awaking from it.குறள் 340:
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்கலைஞர் உரை:
துச்சில் இருந்த உயிர்க்கு.
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.மு.வ உரை:
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.Translation:
The soul in fragile shed as lodger courts repose:-Explanation:
Is it because no home's conclusive rest it knows?.
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.
அறத்துப்பால் - துறவறவியல் - துறவு
Renunciation
குறள் 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்கலைஞர் உரை:
அதனின் அதனின் இலன்.
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.மு.வ உரை:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.சாலமன் பாப்பையா உரை:
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.Translation:
From whatever, aye, whatever, man gets free,Explanation:
From what, aye, from that, no more of pain hath he!.
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.குறள் 342:
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்கலைஞர் உரை:
ஈண்டுஇயற் பால பல.
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.மு.வ உரை:
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.சாலமன் பாப்பையா உரை:
பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.Translation:
'Renunciation' made- ev'n here true pleasures men acquire;Explanation:
'Renounce' while time is yet, if to those pleasures you aspire.
After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).குறள் 343:
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்கலைஞர் உரை:
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.மு.வ உரை:
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.Translation:
'Perceptions of the five' must all expire;-Explanation:
Relinquished in its order each desire.
Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.குறள் 344:
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைகலைஞர் உரை:
மயலாகும் மற்றும் பெயர்த்து.
ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.மு.வ உரை:
தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.சாலமன் பாப்பையா உரை:
உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.Translation:
'Privation absolute' is penance true;Explanation:
'Possession' brings bewilderment anew.
To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.குறள் 345:
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்கலைஞர் உரை:
உற்றார்க்கு உடம்பும் மிகை.
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.மு.வ உரை:
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.சாலமன் பாப்பையா உரை:
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.Translation:
To those who sev'rance seek from being's varied strife,Explanation:
Flesh is burthen sore; what then other bonds of life?.
What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).குறள் 346:
யான் எனது என்னும் செருக்குகலைஞர் உரை:
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம்
புகும்.
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.மு.வ உரை:
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.சாலமன் பாப்பையா உரை:
உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.Translation:
Who kills conceit that utters 'I' and 'mine',Explanation:
Shall enter realms above the powers divine.
He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.குறள் 347:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்கலைஞர் உரை:
பற்றி விடாஅ தவர்க்கு.
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.மு.வ உரை:
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.Translation:
Who cling to things that cling and eager clasp,Explanation:
Griefs cling to them with unrelaxing grasp.
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.குறள் 348:
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிகலைஞர் உரை:
வலைப்பட்டார் மற்றை யவர்.
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.மு.வ உரை:
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.Translation:
Who thoroughly 'renounce' on highest height are set;Explanation:
The rest bewildered, lie entangled in the net.
Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.குறள் 349:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுகலைஞர் உரை:
நிலையாமை காணப் படும்.
பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.மு.வ உரை:
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.Translation:
When that which clings falls off, severed is being's tie;Explanation:
All else will then be seen as instability.
At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.குறள் 350:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்கலைஞர் உரை:
பற்றுக பற்று விடற்கு.
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.மு.வ உரை:
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.சாலமன் பாப்பையா உரை:
ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.Translation:
Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,Explanation:
Cling to that bond, to get thee free from every clinging thing.
Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.
No comments:
Post a Comment