காமத்துப்பால் - கற்பியல் - நினைந்தவர்புலம்பல்
Sad Memories
குறள் 1201:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கலைஞர் உரை:
கள்ளினும் காமம் இனிது.
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.மு.வ உரை:
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.சாலமன் பாப்பையா உரை:
முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.Translation:
From thought of her unfailing gladness springs,Explanation:
Sweeter than palm-rice wine the joy love brings.
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.குறள் 1202:
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்கலைஞர் உரை:
நினைப்ப வருவதொன்று ஏல்.
விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.மு.வ உரை:
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.சாலமன் பாப்பையா உரை:
நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.Translation:
How great is love! Behold its sweetness past belief!Explanation:
Think on the lover, and the spirit knows no grief.
Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.குறள் 1203:
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்கலைஞர் உரை:
சினைப்பது போன்று கெடும்.
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?.மு.வ உரை:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.சாலமன் பாப்பையா உரை:
எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?.Translation:
A fit of sneezing threatened, but it passed away;Explanation:
He seemed to think of me, but do his fancies stray?.
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.குறள் 1204:
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்துகலைஞர் உரை:
ஓஒ உளரே அவர்.
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?.மு.வ உரை:
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?.சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.Translation:
Have I a place within his heart!Explanation:
From mine, alas! he never doth depart.
He continues to abide in my soul, do I likewise abide in his ?.குறள் 1205:
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்கலைஞர் உரை:
எம்நெஞ்சத்து ஓவா வரல்.
அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.மு.வ உரை:
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?.சாலமன் பாப்பையா உரை:
தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.Translation:
Me from his heart he jealously excludes:Explanation:
Hath he no shame who ceaseless on my heart intrudes?.
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.குறள் 1206:
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்கலைஞர் உரை:
உற்றநாள் உள்ள உளேன்.
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?.மு.வ உரை:
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?.சாலமன் பாப்பையா உரை:
அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?.Translation:
How live I yet? I live to ponder o'erExplanation:
The days of bliss with him that are no more.
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?.குறள் 1207:
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்கலைஞர் உரை:
உள்ளினும் உள்ளம் சுடும்.
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பிணைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.மு.வ உரை:
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?.சாலமன் பாப்பையா உரை:
அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?.Translation:
If I remembered not what were I then? And yet,Explanation:
The fiery smart of what my spirit knows not to forget!.
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?.குறள் 1208:
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகலைஞர் உரை:
காதலர் செய்யும் சிறப்பு.
எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?.மு.வ உரை:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!.சாலமன் பாப்பையா உரை:
அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!.Translation:
My frequent thought no wrath excites. It is not so?Explanation:
This honour doth my love on me bestow.
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ? .குறள் 1209:
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்கலைஞர் உரை:
அளியின்மை ஆற்ற நினைந்து.
நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.மு.வ உரை:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.சாலமன் பாப்பையா உரை:
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.Translation:
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,Explanation:
Who said erewhile, 'We're one for evermore'.
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.குறள் 1210:
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்கலைஞர் உரை:
படாஅதி வாழி மதி.
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.மு.வ உரை:
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.சாலமன் பாப்பையா உரை:
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.Translation:
Set not; so may'st thou prosper, moon! that eyes may seeExplanation:
My love who went away, but ever bides with me.
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.
காமத்துப்பால் - கற்பியல் - கனவுநிலையுரைத்தல்
Dream Visions
குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்குகலைஞர் உரை:
யாதுசெய் வேன்கொல் விருந்து.
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.மு.வ உரை:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.சாலமன் பாப்பையா உரை:
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.Translation:
It came and brought to me, that nightly vision rare,Explanation:
A message from my love,- what feast shall I prepare?.
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?.குறள் 1212:
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குகலைஞர் உரை:
உயலுண்மை சாற்றுவேன் மன்.
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.மு.வ உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.சாலமன் பாப்பையா உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.Translation:
If my dark, carp-like eye will close in sleep, as I implore,Explanation:
The tale of my long-suffering life I'll tell my loved one o'er.
If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.குறள் 1213:
நனவினால் நல்கா தவரைக் கனவினால்கலைஞர் உரை:
காண்டலின் உண்டென் உயிர்.
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.சாலமன் பாப்பையா உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.Translation:
Him, who in waking hour no kindness shows,Explanation:
In dreams I see; and so my lifetime goes!.
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.குறள் 1214:
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்கலைஞர் உரை:
நல்காரை நாடித் தரற்கு.
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.Translation:
Some pleasure I enjoy when him who loves not meExplanation:
In waking hours, the vision searches out and makes me see.
There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.குறள் 1215:
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கலைஞர் உரை:
கண்ட பொழுதே இனிது.
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!.மு.வ உரை:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.சாலமன் பாப்பையா உரை:
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.Translation:
As what I then beheld in waking hour was sweet,Explanation:
So pleasant dreams in hour of sleep my spirit greet.
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.குறள் 1216:
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்கலைஞர் உரை:
காதலர் நீங்கலர் மன்.
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.மு.வ உரை:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.சாலமன் பாப்பையா உரை:
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.Translation:
And if there were no waking hour, my loveExplanation:
In dreams would never from my side remove.
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.குறள் 1217:
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்கலைஞர் உரை:
என்எம்மைப் பீழிப் பது.
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?.மு.வ உரை:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?.Translation:
The cruel one, in waking hour, who all ungracious seems,Explanation:
Why should he thus torment my soul in nightly dreams?.
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?.குறள் 1218:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்கலைஞர் உரை:
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.மு.வ உரை:
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.Translation:
And when I sleep he holds my form embraced;Explanation:
And when I wake to fill my heart makes haste!.
When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.குறள் 1219:
நனவினால் நல்காரை நோவர் கனவினால்கலைஞர் உரை:
காதலர்க் காணா தவர்.
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.மு.வ உரை:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.சாலமன் பாப்பையா உரை:
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.Translation:
In dreams who ne'er their lover's form perceive,Explanation:
For those in waking hours who show no love will grieve.
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.குறள் 1220:
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்கலைஞர் உரை:
காணார்கொல் இவ்வூ ரவர்.
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?.மு.வ உரை:
நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.சாலமன் பாப்பையா உரை:
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?.Translation:
They say, that he in waking hours has left me lone;Explanation:
In dreams they surely see him not,- these people of the town.
The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.
காமத்துப்பால் - கற்பியல் - பொழுதுகண்டிரங்கல்
Eventide Sigh
குறள் 1221:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்கலைஞர் உரை:
வேலைநீ வாழி பொழுது.
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!.மு.வ உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.சாலமன் பாப்பையா உரை:
பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.Translation:
Thou art not evening, but a spear that doth devourExplanation:
The souls of brides; farewell, thou evening hour!.
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.குறள் 1222:
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்கலைஞர் உரை:
வன்கண்ண தோநின் துணை.
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?.மு.வ உரை:
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.சாலமன் பாப்பையா உரை:
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?.Translation:
Thine eye is sad; Hail, doubtful hour of eventide!Explanation:
Of cruel eye, as is my spouse, is too thy bride?.
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.குறள் 1223:
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்கலைஞர் உரை:
துன்பம் வளர வரும்.
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.மு.வ உரை:
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.Translation:
With buds of chilly dew wan evening's shade enclose;Explanation:
My anguish buds space and all my sorrow grows.
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.குறள் 1224:
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்துகலைஞர் உரை:
ஏதிலர் போல வரும்.
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.மு.வ உரை:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.Translation:
When absent is my love, the evening hour descends,Explanation:
As when an alien host to field of battle wends.
In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.குறள் 1225:
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்கலைஞர் உரை:
மாலைக்குச் செய்த பகை.
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன? என்று புலம்புகிறது.மு.வ உரை:
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.சாலமன் பாப்பையா உரை:
காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?.Translation:
O morn, how have I won thy grace? thou bring'st reliefExplanation:
O eve, why art thou foe! thou dost renew my grief.
What good have I done to morning (and) what evil to evening?.குறள் 1226:
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகலைஞர் உரை:
காலை அறிந்த திலேன்.
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.மு.வ உரை:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.சாலமன் பாப்பையா உரை:
முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.Translation:
The pangs that evening brings I never knew,Explanation:
Till he, my wedded spouse, from me withdrew.
Previous to my husband's departure, I know not the painful nature of evening.குறள் 1227:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிகலைஞர் உரை:
மாலை மலரும்இந் நோய்.
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.மு.வ உரை:
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.Translation:
My grief at morn a bud, all day an opening flower,Explanation:
Full-blown expands in evening hour.
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.குறள் 1228:
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்கலைஞர் உரை:
குழல்போலும் கொல்லும் படை.
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.மு.வ உரை:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.சாலமன் பாப்பையா உரை:
முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.Translation:
The shepherd's pipe is like a murderous weapon, to my ear,Explanation:
For it proclaims the hour of ev'ning's fiery anguish near.
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).குறள் 1229:
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுகலைஞர் உரை:
மாலை படர்தரும் போழ்து.
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.மு.வ உரை:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.சாலமன் பாப்பையா உரை:
இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.Translation:
If evening's shades, that darken all my soul, extend;Explanation:
From this afflicted town will would of grief ascend.
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.குறள் 1230:
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைகலைஞர் உரை:
மாயும்என் மாயா உயிர்.
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.மு.வ உரை:
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.Translation:
This darkening eve, my darkling soul must perish utterly;Explanation:
Remembering him who seeks for wealth, but seeks not me.
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.
காமத்துப்பால் - கற்பியல் - உறுப்புநலனழிதல்
Limbs Languish
குறள் 1231:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிகலைஞர் உரை:
நறுமலர் நாணின கண்.
பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.மு.வ உரை:
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.சாலமன் பாப்பையா உரை:
பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.Translation:
Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,Explanation:
Thinking on him, who wand'ring far, leaves us in misery.
While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.குறள் 1232:
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்கலைஞர் உரை:
பசந்து பனிவாரும் கண்.
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.மு.வ உரை:
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.சாலமன் பாப்பையா உரை:
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.Translation:
The eye, with sorrow wan, all wet with dew of tears,Explanation:
As witness of the lover's lack of love appears.
The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.குறள் 1233:
தணந்தமை சால அறிவிப்ப போலும்கலைஞர் உரை:
மணந்தநாள் வீங்கிய தோள்.
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.மு.வ உரை:
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.Translation:
These withered arms, desertion's pangs abundantly display,Explanation:
That swelled with joy on that glad nuptial day.
The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).குறள் 1234:
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்கலைஞர் உரை:
தொல்கவின் வாடிய தோள்.
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.மு.வ உரை:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.Translation:
When lover went, then faded all their wonted charms,Explanation:
And armlets' golden round slips off from these poor wasted arms.
In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.குறள் 1235:
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுகலைஞர் உரை:
தொல்கவின் வாடிய தோள்.
வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.மு.வ உரை:
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.சாலமன் பாப்பையா உரை:
வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.Translation:
These wasted arms, the bracelet with their wonted beauty gone,Explanation:
The cruelty declare of that most cruel one.
The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.குறள் 1236:
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்கலைஞர் உரை:
கொடியர் எனக்கூறல் நொந்து.
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.மு.வ உரை:
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.சாலமன் பாப்பையா உரை:
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.Translation:
grieve, 'tis pain to me to hear him cruel chid,Explanation:
Because the armlet from my wasted arm has slid.
I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.குறள் 1237:
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்கலைஞர் உரை:
பூசல் உரைத்து.
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?.மு.வ உரை:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?.Translation:
My heart! say ought of glory wilt thou gain,Explanation:
If to that cruel one thou of thy wasted arms complain?.
Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?.குறள் 1238:
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுகலைஞர் உரை:
பைந்தொடிப் பேதை நுதல்.
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.மு.வ உரை:
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.சாலமன் பாப்பையா உரை:
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.Translation:
One day the fervent pressure of embracing arms I checked,Explanation:
Grew wan the forehead of the maid with golden armlet decked.
When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.குறள் 1239:
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றகலைஞர் உரை:
பேதை பெருமழைக் கண்.
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.மு.வ உரை:
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.சாலமன் பாப்பையா உரை:
(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.Translation:
As we embraced a breath of wind found entrance there;Explanation:
The maid's large liquid eyes were dimmed with care.
When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.குறள் 1240:
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேகலைஞர் உரை:
ஒண்ணுதல் செய்தது கண்டு.
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.மு.வ உரை:
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.சாலமன் பாப்பையா உரை:
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!.Translation:
The dimness of her eye felt sorrow now,Explanation:
Beholding what was done by that bright brow.
Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?
காமத்துப்பால் - கற்பியல் - நெஞ்சொடுகிளத்தல்
Soliloquy
குறள் 1241:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்கலைஞர் உரை:
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?.மு.வ உரை:
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?.Translation:
My heart, canst thou not thinking of some med'cine tell,Explanation:
Not any one, to drive away this grief incurable?.
O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?.குறள் 1242:
காதல் அவரிலர் ஆகநீ நோவதுகலைஞர் உரை:
பேதைமை வாழியென் நெஞ்சு.
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.மு.வ உரை:
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.Translation:
Since he loves not, thy smartExplanation:
Is folly, fare thee well my heart!.
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.குறள் 1243:
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்கலைஞர் உரை:
பைதல்நோய் செய்தார்கண் இல்.
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?.மு.வ உரை:
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!.சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.Translation:
What comes of sitting here in pining thought, O heart? He knowsExplanation:
No pitying thought, the cause of all these wasting woes.
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.குறள் 1244:
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்கலைஞர் உரை:
தின்னும் அவர்க்காணல் உற்று.
நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.மு.வ உரை:
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.Translation:
O rid me of these eyes, my heart; for they,Explanation:
Longing to see him, wear my life away.
O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.குறள் 1245:
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்கலைஞர் உரை:
உற்றால் உறாஅ தவர்.
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?.மு.வ உரை:
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?.சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?.Translation:
O heart, as a foe, can I abandon utterlyExplanation:
Him who, though I long for him, longs not for me?.
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?.குறள் 1246:
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்கலைஞர் உரை:
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?.மு.வ உரை:
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.Translation:
My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,Explanation:
If thou thy love behold, embracing, soothing all thy pain.
O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.குறள் 1247:
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சேகலைஞர் உரை:
யானோ பொறேன்இவ் விரண்டு.
நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.மு.வ உரை:
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.சாலமன் பாப்பையா உரை:
நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.Translation:
Or bid thy love, or bid thy shame depart;Explanation:
For me, I cannot bear them both, my worthy heart!.
O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.குறள் 1248:
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்கலைஞர் உரை:
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.மு.வ உரை:
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!.Translation:
Thou art befooled, my heart, thou followest him who flees from thee;Explanation:
And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'.
You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.குறள் 1249:
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீகலைஞர் உரை:
யாருழைச் சேறியென் நெஞ்சு.
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.மு.வ உரை:
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.Translation:
My heart! my lover lives within my mind;Explanation:
Roaming, whom dost thou think to find?.
O my soul! to whom would you repair, while the dear one is within yourself?.குறள் 1250:
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமாகலைஞர் உரை:
இன்னும் இழத்தும் கவின்.
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.மு.வ உரை:
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.சாலமன் பாப்பையா உரை:
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.Translation:
If I should keep in mind the man who utterly renounces me,Explanation:
My soul must suffer further loss of dignity.
If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.
No comments:
Post a Comment